ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான்மஸ்க் வாங்கியுள்ளார். இதனை அடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கின்றார். முன்னதாக விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் பணியாளர்களின் எண்ணிக்கையை 75% அளவிற்கு குறைக்கவும் மூன்று வருடங்களில் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது சுமார் 7,500 ஊழியர்கள் ட்விட்டரில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் அதன் எண்ணிக்கை 2,000 ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.