Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்… தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரத்தில் வாக்கு சேகரிப்பில் உறுதி..!!

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட லக்கயங்கொட்டை, கே.அத்திக்கோம்பை, ரங்கநாதபுரம், சத்திய நாதபுரம், காலனி, பெயில் நாயக்கன்பட்டி, குமாரசாமிகவுண்டன்புதூர், புதுகளஞ்சிபட்டி, கண்ணப்பன்நகர், பழையகாளாஞ்சி, சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு அவர் பேசுகையில், என்னை 5 முறை சட்டமன்ற உறுப்பினராக பொதுமக்கள் நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். இதற்காக நான் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்கு கடந்த கால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். ரூ.530 கோடி செலவில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். வேலைவாய்ப்பில் 40 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படும். அரசு கல்லூரி தொப்பம்பட்டி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய இடங்களில் தொடங்கப்படும். மேலும் பல்கலைக்கழகம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தில் கட்டித் தரப்படும்.

தடுப்பணை விவசாயிகளுக்கு தேவைப்படும் இடங்களில் கட்டித்தரப்படும். மேலும் ஏழை எளிய மக்களுக்கு தொழில் பயிற்சி தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், அரசு மருத்துவமனையின் புதிய மருத்துவக் கல்லூரி ஒட்டன்சத்திரத்தில் அமைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் மக்களின் குறையை தீர்ப்பதற்கு நல்லாட்சி அமைந்திட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்களின் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |