தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இவ்வாறு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூடுதலாக 400 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை திருச்சியில் திறந்து வைத்தேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். நான் ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கொரோனா இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள். ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று நடத்தப்படும் ஆலோசனைக்கு பிறகு தெரியும்” என்று கூறியுள்ளார்.
திருச்சியில் கூடுதலாக 400 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தேன்.
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் #COVID19 இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்! pic.twitter.com/DAVYq8Gibb
— M.K.Stalin (@mkstalin) May 21, 2021