தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் மே இரண்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. இதையடுத்து வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக இடையே அமைச்சரவை பங்கீடு இழுபறி நீடித்து வருவதால் பதவி ஏற்பு தேதியை முடிவு செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.
ரங்கசாமி நேற்று முன்தினம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் துணை முதலமைச்சர் பதவியை உருவாக்கி நமச்சிவாயத்தை துணை முதல்வராக்க பாஜக திட்டமிட்டுள்ளது. சபாநாயகர் பதவியை பாஜக கேட்பதால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.