சமீபத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோவையில் தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்த கோரி மனு ஒன்றை அளித்தனர். அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் அமர்ந்திருந்தவாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடமிருந்து மனுவை வாங்கினார். அப்போது அங்கு இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயராமன், எஸ் பி வேலுமணி ஆகியோர் இப்படிதான் மனுவை அமர்ந்துகொண்டு வாங்குவீர்களா? நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்று கூற பிறகு ஆட்சியர் எழுந்து நின்று மனுவை வாங்கினார்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மனு அளிக்க வந்திருந்தபோது ஆட்சியர் அமர்ந்திருந்து மனுவை வாங்கியதால் அவரை மிரட்டும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் பேசி இருந்தார்கள் என்று கூறி எஸ் பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஏ கே செல்வராஜ் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் மீது சூலூர் திமுக பொறுப்பாளர் முருகேசன் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.