Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி”… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!!!

ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தார்கள். அப்போது சிங்கிகுளம் இந்திரா நகரில் வாழ்ந்து வரும் விவசாயியான முருகன் என்பவர் மனு கொடுக்க வந்த பொழுது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது போலீஸார் அவரை தடுத்து தண்ணீரை ஊற்றி மீட்டார்கள்.

பின் அவர் ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அவர் அந்த மனுவில் கூறியிருந்ததாவது, சிங்கிகுளம் இந்திரா நகர் தெற்கு தெருவில் 50 வீடுகள் உள்ளது. மெயின் ரோட்டிலிருந்து அந்த தெருவிற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் அடைத்து வைத்திருந்த நிலையில் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் அவர் அதை அகற்றிய இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த நபர் பாதையை அடைத்து விட்டார் இதனால் தெற்கு தெருவுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து கோவில் குளத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் மனு கொடுக்க வந்த பொழுது வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்கள்.

Categories

Tech |