Categories
மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் தீ… அரசு ஆவணங்களில் எரிந்து சேதம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் நில அளவு துறை இயங்கி வருகின்றது. இந்த நில அளவைத் துறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காலை பணிக்கு வந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அறிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பல நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தீ விபத்தில் நில அளவை தொழில்நுட்ப அலுவலக பிரிவில் உள்ள அரசு நில ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |