திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது ஏராளமான மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தார்கள். மொத்தம் 238 மனுக்களை ஆட்சியரிடம் மக்கள் அளித்தார்கள். ஆட்சியர் அந்த மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆட்சியர் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளி, தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு என பலர் கலந்து கொண்டார்கள்.