Categories
மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை வாங்க மறுத்த அதிகாரிகள்”…. தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!!

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்ததால் பாதிக்கப்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பொன்முடி கிராமத்தில் சென்ற 25ஆம் தேதி மாதா கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் மனக்கொடுக்க வந்தார்கள். ஆனால் ஆட்சியர் இல்லாததால் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பத்துக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார்கள். இதை தொடர்ந்து அதிகாரிகள் மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். இதுபற்றி பாதிக்கப்பட்ட பரிமளா என்பவர் கூறியுள்ளதாவது, மாதா கோயில் திருவிழாவில் சப்பர ஊர்வலத்தில் நடந்த பிரச்சனை பற்றி போலீசில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவமனையில் இருந்து நாங்கள் ஊருக்கு சென்ற பொழுது எங்கள் குடும்பத்தினரை ஊருக்குள் விடாமல் தடுத்து பிரச்சினை செய்கின்றார்கள். இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |