புதிய ஆட்சியர் கட்டிடத்தில் ஆறு தளங்களிலும் அமைய உள்ள வசதிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆறு தளங்களுடன் கட்டப்படும் ஒருங்கிணைந்த கட்டிடத்திற்கு நேற்று முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தில் அமைய உள்ள வசதிகள் என்னவென்றால், தரைதளத்தில் அஞ்சலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பொதுமக்கள் குறைத்திட்ட கூட்டம் அரங்கம், தேர்தல் பிரிவு அரங்கம், வாகனம் நிறுத்தம் உள்ளிட்டவையும் முதல் தளத்தில் தொழிலாக பாதுகாப்புத் துறை குற்ற வழக்குகள் பதிவுத்துறை புள்ளியல் துறை அலுவலகங்களும் இரண்டாவது தளத்தில் பஞ்சாயத்து உதவி இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தேசிய தகவலியல் மையம், மாவட்ட கருவூலம் மற்றும் இரண்டு துணை ஆட்சியர் அலுவலகங்களும் செயல்படுகின்றது.
மேலும் மூன்றாவது தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், முத்திரை, துணை ஆட்சியர் கலால், அமலாக்கத்துறை, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், நலத்துறை தணிக்கை மற்றும் சுற்றளவு துறை அலுவலர்கள் உள்ளிட்டவை செயல்படும். நான்காவது தளத்தில் அலுவலகம் கூட்ட அரங்குகள், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, துணை கலெக்டர்கள் மற்றும் பயிற்சி கலெக்டர் அலுவலகம் செயல்படும். ஐந்தாவது தளத்தில் அவசரக்கால உதவி மையம், சிறப்பு மாவட்டம் வருவாய் அலுவலகம், மருந்து இயக்குனர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிறப்பு தாசில்தார் அலுவலகங்கள் செயல்படும். மேலும் ஆறாவது தளத்தில் கனிம வள சிறப்பு துணை இயக்குனர், மகளிர் மேம்பாட்டு நல உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.