Categories
மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட வயதான தம்பதியினர்”…. கண்ணீர் மல்க மனு….!!!!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு வயதான தம்பதியினர் தர்ணாவில் ஈடுபட்டார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி-சாராதாம்பாள் தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கின்றார்கள். சென்ற 2009 ஆம் வருடம் தனது மகன்களுக்கு இவர்கள் தனக்கென சிறிய நிலத்தையும் ஒரு குடிசை வீட்டையும் வைத்துக்கொண்டு மற்றதை பிரித்துக் கொடுத்து விட்டார்கள். இந்த நிலையில் இவர்களின் மகன்களில் ஒருவன் தந்தையை ஏமாற்றி அவரது பாகத்தையும் தனது பெயருக்கு மாற்றி எழுதி வீட்டிலிருந்து விரட்டி விட்டார்.

இதனால் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரியிடம் தங்கசாமி புகார் அளித்தார். நான்கு மகன்களும் அவர்களை பராமரிக்க முன்வராததால் நேற்று காலை மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இவர்கள் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார்கள். இதை அடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து ஆட்சியரிடம் அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது வயதான தம்பதியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மகனிடம் இருந்து தனது நிலத்தை மீட்டு தர வேண்டும் எனவும் இல்லாவிட்டால் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க மனு கொடுத்தார்கள். இதை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Categories

Tech |