Categories
மாநில செய்திகள்

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு விருது அறிவிப்பு…. தமிழக அரசு…..!!!

2021ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் / நிறுவனங்களை தேர்வு குழு ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்னர்.

சிறந்த தொண்டு நிறுவனமாக ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி, சிறந்த சமூகப்பணியாளராக நாகர்கோவிலைச் சேர்ந்த மரிய அலாய்சியஸ் நவமணி, சிறந்த மருத்துவராக பத்மப்ரியா, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் வி ஆர் யுவர் வாய்ஸ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் விருது வழங்கப்படும்

Categories

Tech |