கரூரில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் காரில் செல்லும்போது பாஜகவினர் பட்டாசு வெடித்து பிரச்சினை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜகவினர் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்கரூரில் மாவட்ட ஆட்சியர் கார் வரும் வழியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதை பார்த்த ஆட்சியர் பட்டாசு வெடிக்க பாஜக அனுமதி பெற்றுள்ளதா? என்று கேட்டு அனுமதி பெறவில்லை என்றால் பாஜகவினர் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் பட்டாசு வெடிக்க அனுமதி பெற்றுள்ளதா? என்று ஆட்சிப் பரப்பு சங்கர் அவர்களை பார்த்து கேட்டபோது அதனை எதிர்த்து பாஜகவினர் வாக்குவாதம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.