Categories
தேசிய செய்திகள்

ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?… பீகாரில் தொடங்கியது விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை…!!!

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுவதால் நாடு முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி களத்தில் இருந்தன. இதனைத் தவிர ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைமையில் ஒரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம்விலாஸ் பஸ்வான் லோக் ஜன சக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டது.

அந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. பீகாரில் 38 மாவட்டங்களில் 55 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதில் தபால் வாக்குகள் முதலிலும் அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக வாக்குப்பதிவு மையங்களில் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வேட்பாளர் மற்றும் அவரின் 2 முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட ராஷ்டீரிய ஜனதா தளம் மெகா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி ஆளும் நிதிஷ்குமார் தரப்புக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் மீண்டும் முதல் மந்திரி ஆவார் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதே சமயத்தில் மெகா கூட்டணி வெற்றி கண்டார் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல் மந்திரி ஆவார். அவ்வாறு அவர் ஆட்சி அமைத்தால் இந்தியாவிலேயே மிக இளவயதில் முதல்-மந்திரி ஆனவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். அதனால் பீகார் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த தேசமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |