நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகியுள்ளது. அதனால் அங்கு வாழ்வதற்கு மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அங்கிருந்து மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி அமெரிக்க படை முற்றிலும் வெளியேறிய பிறகுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அமெரிக்காவோடு தலிபான் ஒப்பந்தம் செய்துள்ளதாக, தலிபான் மூத்த தலைவர் அனல் ஹக்கானி கூறியுள்ளார்.