Categories
அரசியல்

“ஆட்சி கலைப்பு” குறித்து திருமா கருத்து…. ஷாக் ஆன திமுக உடன்பிறப்புகள்..!!

சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், இம்மானுவேல் சேகரன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன் இமானுவேல்சேகரன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆணையம் உருவாக்கியதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதில் சிக்கல் உள்ளது என்பதால் தலித் சமூகம் அல்லாத ஒருவரை இந்த பதவிக்கு நியமனம் செய்ய வேண்டும்.

தமிழகத்தின் புதிய ஆளுநர் நியமனம் குறித்து காங்கிரஸ் ஐயம் கொள்வது சரி தான். உளவு துறையோடு சுலபமான உறவு வைத்துள்ள ஒருவரை தமிழக ஆளுநராக வேண்டும் என்று மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஜனநாயக பூர்வமாக செயல்படக் கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும். யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ் நாட்டின் ஆட்சியை கலைத்து விடும் தெம்பும், திராணியும் கிடையாது என்று கூறியுள்ளார். ஆட்சி கலைப்பு தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் திருமாவளவன் நேர்மையாக பேசி இருந்தாலும், அவருடைய இந்த பேச்சு உடன் பிறப்புகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |