நேற்று முதல் அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து விட்டு நாளை காலை பேரவைக்கு செல்வதற்கு முன்பாக நாங்கள் ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என்றார். அந்த வகையில் பேரவைக்கு புறப்படுவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முதல்வர் நாராயணசாமி ஆலோசனையில் ஈடுபட்டு விட்டு சென்று இருக்கின்றார்.
இன்று காலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் என்னவென்றால், பேரவையில் தங்களுடைய ஆட்சியை இழக்கிறோமோ இல்லையோ மூன்று நியமன உறுப்பினர் களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் இல்லை என்பதை பேரவையில் பதிவு செய்துவிட்டு வெளியேற வேண்டும். எதிர்க்கட்சிகளை பொருத்தவரை 14 பேர் இருக்கின்றார்கள். ஆளும் கட்சியை பொறுத்தவரை சபாநாயகருடன் சேர்ந்து 12 பேர் இருக்கின்றார்கள். 3 நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் கூறி விட்டால் அவர்களுடைய பலம் 11 ஆகிவிடும்.
ஆளும் கட்சிக்கு பலம் 11ஆக இருந்தாலும் கூட சபாநாயகர் விருப்பப்பட்டால் ஆளும் கட்சிக்கு வாக்களித்து ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க செய்யலாம். இருந்தாலும் ஆட்சியை நீடிப்பதற்கு முதல்வர் நாராயணசாமி விரும்பவில்லை. ஆகவே இந்த பேரவையிலே நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க அதிகாரம் இல்லை என்ற ஒரு கருத்தை சட்டப் பேரவை முடியும் தருவாயில் பதிவு செய்துவிட்டு பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இதற்கான முடிவு தான் நடைபெற்ற முக்கிய ஆலோசனையில் எடுக்கப்பட்டிருக்கின்றது.