Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டநாயகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல்”…. கிரிக்கெட் தொடரில் நடந்த…. சுவாரசிய சம்பவம்…!!

மத்தியபிரதேசத்தில் ஆட்டநாயகன் விருதை வென்ற கிரிக்கெட் வீரருக்கு பரிசாக 5லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகின்றது.

கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் கரூரில் பெட்ரோல்பங்க் உரிமையாளர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளுவர் தினத்தன்று பிழையில்லாமல் திருக்குறள் சொல்லியவர்களுக்கு  ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கியுள்ளார். இதையடுத்து பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து  பெட்ரோல் பங்கில் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் ஹெல்மெட் உடன் கிரிக்கெட்டில் சதம் அடிப்பவர்கள் நிற்பது போல போஸ் கொடுத்தார்.

இந்நிலையில் மத்திய பிரதேசம் போபாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் தொடர் ஒன்றில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் சலாவுதீன் அப்பாஸிக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |