ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேடம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி – வினயகஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யத்தீந்திரா (12), வஹிந்திரா (11) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் யத்தீந்திராவுக்கு ஆட்டிசம் நோய் இருக்கிறது. இவர்கள் 2 பேரும் கடந்த 11-ஆம் தேதி பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸூடன் சேர்ந்து இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றனர். அதன் பிறகு 17 ஆயிரம் அடி உயரமுள்ள ப்ரன்ஷிப் பீக் மற்றும் 15 ஆயிரம் அடி உயரமுள்ள பிர்கு லேக், 14 ஆயிரம் அடி உயரமுள்ள பத்தால் சூபிக் என்ற 3 மலைகள் மீது ஏறி உள்ளனர்.
இந்த மலைகளை 7 நாட்களில் ஏறி முடித்துள்ளனர். அதன் பிறகு வீட்டிற்கு திரும்பிய 2 சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பினும் சிறுவன் தனக்கு இருக்கும் நோயை எண்ணி கவலைப்படாமல் மலையேறி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சிறுவனிடம் கேட்டபோது நான் தமிழக முதல்வரை சந்தித்து ஆசி வாங்க விரும்புகிறேன் என்று கூறினார். இந்த 2 சிறுவர்களையும் எண்ணி அவர்களது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.