திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஜோதி. இவரது வீட்டில் செல்லப்பிராணியாக ஆடு மற்றும் நாய் வளர்த்து வருகின்றார். ஜோதியின் வீட்டிலுள்ள ஆடு குட்டி ஈனியுள்ளது. ஆனால் ஆட்டிற்கு பால் சுரக்கவில்லை.
இதனையடுத்து குட்டி ஆட்டுக்கு அவரது வளர்ப்பு நாய் பால் கொடுத்து வருகிறது. இதனை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தான் என்பதை இந்த செயல் மெய்ப்பித்து உள்ளது.