Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை…. அலறி சத்தம் போட்ட தொழிலாளர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பாரத் நகர் குடியிருப்பு பகுதியில் தேயிலை தோட்ட பணியாளர்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அடிக்கடி இந்த ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை அடித்து கொன்றுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர்.

இதனால் ஆட்டை அங்கேயே போட்டுவிட்டு சிறுத்தை தப்பி சென்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |