ஆட்டை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணுவாய் திருவள்ளுவர் நகரில் கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவள்ளுவர் நகர் அடிவார பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஒரு ஆடு மட்டும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தபோது ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தை என்பது உறுதியானது. இந்த சம்பவம் பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.