தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை பயன்படுத்தி, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் பயணம் செய்யும் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் அதனை மீறினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் நபரைக் குறித்து புகார் அளிப்பதற்கான அவசர எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்ட காவல் அவசர எண்கள் 100 மற்றும் 103 ஆகும். மேலும் 9003130103 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம் என சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.