சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சி விளக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. அதன்பின் ஆட்டோவில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் இலந்தைக்குளம் பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் பச்சைகிளி என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் விற்பனை செய்வதற்காக ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த ஆட்டோ மற்றும் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.