சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரான பாலமுருகன், அவரது நண்பர் முருகராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா பொட்டலங்களையும், ஆட்டோவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.