ஆட்டோவில் ஏற்ற மறுத்ததால் டிரைவரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மாவிலங்கை பகுதியில் வசித்து வரும் குமரய்யா என்பவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்கு சென்ற போது வேப்பங்குளத்தை சேர்ந்த கண்ணாயிரமூர்த்தி என்பவர் ஆட்டோவில் ஏற முயன்றுள்ளார். அப்போது குமரய்யா அவரை ஆட்டோவில் ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் குமரய்யாவிற்கும், கண்ணாயிரமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணாயிரமூர்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமாரயாவை வெட்டியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆட்டோ டிரைவரை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து குமரய்யா அளித்த புகாரின் அடிப்படையில் கமுதி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கண்ணாயிரமூர்த்தியை கைது செய்துள்ளனர்.