ஆட்டோவில் சென்ற நகை கடை வியாபாரியை வழிமறித்து, போலீஸ் என கூறி 650 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சியை சேர்ந்த சின்னையா என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார் . இவர் கோவையில் தங்க நகைகளை வாங்கி விட்டு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். அப்போது, பெரியகடை வீதி போலீஸ் நிலையம் அருகாமையில் சித்தி விநாயகர் கோயில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 நபர்கள் , அந்த ஆட்டோவை நிறுத்தினர் .நாங்கள் போலீஸ் எனக் கூறி சின்னையாவிடம் உங்கள் பொருட்களை சோதனையிட வேண்டும் எனக்கூறினார் .
அவர்கள் போலி போலீஸ் என்பதை அறியாத சின்னையா அவர்களிடம் தன்னிடம் இருந்தவற்றை காண்பித்தார் .பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர் .சிறிது தூரம் சென்ற பின் தன் பையில் இருந்த 650 கிராம் தங்க நகை இல்லாததை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார் .இதையடுத்து சின்னய்யா பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் . புகாரின் பேரில் பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.