Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆட்டோவில் வந்த பெண்கள்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் முத்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் ஆட்டோவில் வந்து எங்கே போக வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை அடுத்து மூதாட்டியை ஆட்டோவில் ஏறுங்கள் எனக்கூறி தன்யா நகர் ஆர்ச் அருகே இறக்கி விட்டுள்ளனர்.

அப்போது தன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்தம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |