Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் வைத்து கடத்தல்… போலீஸ் அதிரடி சோதனை… 596 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்த வந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர் 596 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கண்டமனூர் காவல்துறையினர் கணேசபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் இருந்த சாக்குபையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் இருந்த அம்மாபட்டியை சேர்ந்த ஜெகன், தெப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்த 596 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் எங்கிருந்து கடத்தி கொண்டுவரப்பட்டது என விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் தர்மராஜபுரம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த செல்வராஜ் மற்றும் பிரபு ஆகிய இருவரையும் வருசநாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதனைதொடர்ந்து அவர்களிடம் இருந்த 18மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |