கர்நாடகா மாநிலம் மங்களூர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவும் இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
மங்களூர் அருகே கிணிக்கோலியில் வாலிபர் ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியே வந்த ஆட்டோ வேகமாக அவர் மீது மோதியது. இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி, பலத்த காயமடைந்தார். மேலும் விபத்தில் ஆட்டோவும் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அதன் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.