மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் 4 1/2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காரணம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகமான பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது தான்.
எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டோ, மது அருந்திக்கொண்டோ ஆட்டோ ஓட்டக்கூடாது. மேலும் மோட்டார் வாகன சட்டத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவின் கதவு பூட்டப்பட்டதை உறுதி செய்த பின் செல்ல வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தை கடைப்பிடிக்காமல் ஆட்டோ ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.