Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை”…. 5 பேரை கைது செய்த போலீஸார்…!!!!

ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் மேலத் தெருவில் வசித்து வந்தவர் துரைபாண்டி. ஆட்டோ டிரைவரான இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கின்றார்கள். சென்ற சில நாட்களுக்கு முன்பாக இவரும் இவரின் நண்பர் ஆறுமுகபாண்டியும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று சிலர் ரேஷன் அரிசியை வாங்கி திருட்டுத்தனமாக விற்பனை செய்வதாக மனு அளித்துள்ளனர். நேற்று காலையில் இவரும் நண்பர் ஆறுமுகபாண்டியும் தளவாய்புரம் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி இருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் உருட்டுக்கட்டையால் துரைப்பாண்டியை அடித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் துரைப்பாண்டி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த துரைபாண்டியனை கோவில்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகாராஜன், ராஜாராம், மனோஜ், சவலாப்பேரி ஜானகிராம், சின்னதுரை உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |