Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆட்டோ ட்ரைவராக மாறிய அமைச்சர்…. விஜயபாஸ்கர்க்கு என்ன ஆச்சு…. மக்களின் எண்ணம்…!!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ஓட்டி சென்று பயணிகளை இறக்கி விட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் அவர்கள் தனது சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தென்னலூர் கிராமத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க புறப்பட்டார். அப்போது மாணவிகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருந்த ஆட்டோ ஒன்று திருப்பூர் சாலையில் பெரியகுரும்பம்பட்டிக்கு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அமைச்சர் தானே அந்த ஆட்டோவை ஓட்ட போவதாக கூறினார்.

இதனால் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் ஆட்டோவில் அமர்ந்திருந்தனர். பின்னர் அமைச்சர் ஆட்டோவை எடுத்துக்கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்று பெரியகுரும்பம்பட்டியில்  அனைவரையும் இறக்கிவிட்டார். சுகாதாரத் துறை அமைச்சரின் இந்த செயல் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்வதற்காக இருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர்.

Categories

Tech |