பொதுமக்கள் தங்கள் பயணத்திற்காக ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றார்கள் அப்படி ஆட்டோவில் பயணம் மேற்கொள்பவர்களும் ஆட்டோ இயங்காத நேரத்தில் ஓட்டுனர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்கு இடையே பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்னும் பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாம் பவுண்டேஷனின் முயற்சியில் 20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் ஆட்டோ தம்பி என்னும் பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆட்டோவில் புத்தகங்கள் நாவல்கள் இடம்பெறுகிறது. மேலும் சோதனை அடிப்படையில் துடியலூர் சேர்ந்த சையது என்பவரின் ஆட்டோவில் இந்த ஆட்டோ நூலகம் தொடங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆட்டோ தம்பி என்ற இந்த ஆட்டோ நூலகத்தை தொலைபேசி மூலமாக அழைத்து தங்களது இருப்பிடத்திற்கு வரவழைத்து பயணம் மேற்கொள்ளலாம் எனவும் இதனை நேற்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைப்பதாக டாக்டர் கலாம் பவுண்டேஷனின் நிறுவனர் கிஷோர் கூறியிருந்தார். அந்த வகையில் நேற்று ஆட்டோக்களில் மினி லைப்ரரி கமிஷனர் பாலகிருஷ்ணன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது ஆட்டோ டிரைவர்கள் மீது நம்பிக்கை வரும் விதமாக நடந்து கொள்ள வேண்டும் மக்கள் மத்தியில் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தவும் முயற்சிக்க வேண்டும். மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகள் நலம் கருதி ஒவ்வொரு ஆட்டோவிலும் மினி உலகம் அமைக்கப்படும் மாதம் 3 முதல் 5 புத்தகங்கள் ஒவ்வொரு ஆட்டோவிலும் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மாதம் தோறும் இந்த புத்தகங்கள் மாற்றப்படுகிறது இதன் மூலமாக பயணிகளுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். மேலும் அடுத்த கட்டமாக கால் டாக்ஸிகளிலும் நூலகம் தொடங்க முயற்சி செய்யப்படும் என கமிஷனர் கூறியுள்ளார்.