தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருவதை நடுத்தர மக்கள் மத்தியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்டோக்களில் அடிப்படை கட்டணம் 25 ரூபாய், அடுத்தடுத்த கிலோமீட்டர்களுக்கு தலா 12 என கடந்த 2013ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதால் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பொதுத் துறை அதிகாரிகளுடன் 12 ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டணமாக ரூ.50 அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 கட்டணமாக அரசு கொடுக்க வேண்டும். ஆட்டோ காத்திருப்பு கட்டணத்தில் ஒரு நிமிஷத்துக்கு ரூ.1 என நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.