இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு தனி சட்டம் நிறைவேற்றுமாறு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்ற சா. முருகேசன் மற்றும் கண்ணகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களை கண்ணகியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவ்விருவரையும் தேடி கண்டுபிடித்து கடந்த 2003 ஜூலை 8-ம் தேதி கொடூரமாக விஷம் ஊற்றிக் கொன்றுள்ளனர். சாதி ஆதிக்க சக்திகளுக்கும், சட்ட அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையாக, கடலூர் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்முறை தடுப்பு சிறப்பு நீதிமன்றமானது தற்போது தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதி உத்தமராசனுக்கும், வழக்கறிஞர் ரத்தினம் உள்பட சமூக செயல்பாட்டாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவானது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இத்தகைய சாதி ஆணவக் கொலைகலானது, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க உறுதியான தனிச் சட்டம் தேவை வலியுறுத்துகிறது. இதனை மையமாக வைத்து தமிழக அரசானது, ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு விரைவில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.