கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க வேண்டும், ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு தேனி தாலுகா தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், இந்திய மாணவர் சங்க தலைவர் நாகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், மாவட்ட நிர்வாகிகள் சவுந்தரபாண்டியன், கரண்குமார் உள்பட பாரும் பங்கேற்றுள்ளனர்.