8 வயது சிறுமி ஆணி பலகையில் யோகா செய்து அசத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் நஸ்ருதீன்- ஜலீலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் ஷாஜிதா ஸைனப் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து மத நல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி 8 வயது சிறுமி ஷாஜிதா ஸைனப் யோகா செய்துள்ளார்.
இந்த சிறுமி தேசியக்கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி, ஆணி பலகையில் யோகா செய்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் முகமது உசேன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணைத்தலைவர் ராமலட்சுமி, வார்டு உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுமியை பாராட்டியுள்ளனர்.