Categories
உலக செய்திகள்

ஆணுடன் தொலைபேசியில் பேசிய பெண்…. பெண்ணுக்கு அளிக்கப்பட்ட கொடூர தண்டனை…. வெளியான புகைப்படக் காட்சி….!!

ஆப்கானிஸ்தானில் ஆண் ஒருவருடன் தொலைபேசியில் பேசிய பெண்ணை சாட்டையால் அடிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் வரும் செப்டம்பர்11ஆம் தேதி அமெரிக்கா திரும்பும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெண் ஒருவர் ஆண் ஒருவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்தப் பெண் தொலைபேசியில் ஆணுடன் பேசிய குற்றத்திற்காக ஆண்கள் பலர் சேர்ந்து ஒரு இடத்தில்அந்தப் பெண்ணை அமர வைத்து சாட்டையால் அடித்து வருகின்றனர்.

அடிக்கும் நபருக்கு கை வலித்தவுடன் அடுத்த நபர் அதை வாங்கி அந்த பெண்ணை அடித்து வருகிறார். இந்த காட்சியை பலர் வேடிக்கை பார்ப்பதுடன் பலர் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கப் படைகள் இருக்கும்போதே இந்த சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அவர்கள் சென்றால் என்னவாகும் என்ற அச்சம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |