குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா தலைமையில் ஒரு குழு மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அந்த சோதனையின் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய குமரேசன் என்பது தெரியவந்தது.
அதன்பிறகு குமரேசனை காவல்துறையினர் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது போலீஸ் சூப்பிரண்டு தீபா குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். எனவே மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவே குமரேசனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.