கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அருளம்பாடி பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் பாபுவை கைது செய்துள்ளனர்.
இவர் மீது காவல்துறையில் பல கஞ்சா வழக்குகள் பதிவாகி இருந்ததால் பாபுவை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கவே பாபு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.