அரசின் விதிமுறைகளை மீறி உரம் விற்பனை செய்யும் உர நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் அமைந்துள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், உரக்கிடங்குகள், கலவை உர உற்பத்தி நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் நேற்று மேலாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ், அற்புதசெல்வி, ஆய்வாளர் ஜி. அனுசுயா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உர கட்டுப்பாட்டு ஆணை 1985- ஐ மீறிய உர விற்பனை செய்த 2 விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக உர விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது.
மேலும் இது குறித்து திருவண்ணாமலை மேலாண்மை இணைய இயக்குனர் பாலா கூறியதாவது. உரங்களை அரசு நிர்ணம் செய்த விலைக்கு விற்பனை செய்தல், முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தி உரங்களை விற்பனை செய்தல், விற்பனை செய்யப்பட்ட உரங்களுக்கான ரசீது மற்றும் விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் இருத்தல், பதிவேடுகள் பராமரித்தல், யூரியாவுடன் கூடுதல் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தல் போன்றவை குறித்து மாவட்டதில் அமைந்துள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அப்போது உர கட்டுப்பாட்டு ஆணை 1985- ஐ மீறி உர விற்பனை செய்தால் இருப்பு பதிவேட்டில் எழுத்துப்பூர்வமாக உர கட்டுப்பாட்டு ஆணை 1985-மீதி செயல்கள் என பதிவு செய்து உர விற்பனை நிலையத்தில் உர உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் தற்போத 2,194 டன் யூரியாவும், 814 டன் பொட்டாஸ், 417 டன் சூப்பர் பாஸ்பேட், 4 ஆயிரத்து 113 டன் காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சில்லறை உர நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.