நடிகை சுஷ்மிதா சென் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பாலிவுட்டுக்கு சென்ற அவர் பிரபல நடிகையாக வளம் வர ஆரம்பித்தார். இவர் முன்னாள் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 2000 ஆண்டு ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளத்து வந்தார். அதன் பிறகு 2019 இல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்.
திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாதது குறித்து சுஷ்மிதா சென் தெரிவித்ததாவது: ” அதிர்ஷ்டவசமாக சில சுவாரசியமான ஆண்களை நான் சந்தித்து உள்ளேன். அதுமட்டுமல்லாமல் அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன். ஆகையால் தான் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் மூன்று முறை எனக்கு திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. ஆனால் கடவுள் என்னை காப்பாற்றி விட்டார். அதேபோல அந்த கடவுள் தான் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.