Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்க…”இந்த பழங்களை எல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க”… இதோ லிஸ்ட்..!!

ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்க முக்கிய உணவு வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள ஆண்களின் மிக முக்கிய குறைபாடாக பார்ப்பது ஆண்மைகுறைபாடு. திருமணமாகி இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு இயற்கை முறையில் சில பழங்களை உண்டு நாம் அதை சரி செய்ய முடியும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

மாதுளம் பழம் :

ஆண்மையை பெருக்கும் பழங்களில் முக்கியமானது மாதுளை. தினந்தோறும் இரவு மாதுளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு நீங்கும்.

அரச விதை :
அரச மரத்தின் பழ விதையை தூள் செய்து சாப்பிட்டால் ஆண்களின் மலட்டு தன்மை நீங்கி அரசனாக வாழலாம்.

அத்திப்பழம் :

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சிறக்கும்.

முருங்கைக் கீரை :

முருங்கை மரத்தின் இலை, காய், பிசின் என அனைத்துமே ஆண்மைக்கான மருந்தாக உள்ளது. முருங்கை இலையை பொரியல் செய்து அதனை நெய்யில் கலந்து 48 நாட்கள் உண்டு வந்தால் ஆண்மை விருத்தியாகும்.

திப்பிலி :

திப்பிலை பொடி செய்து அதை நெய்யில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

பேரிச்சம் பழம் :

பேரிச்சம் பழம் உடலுக்கு இரும்புச்சத்து மற்றும் ஆற்றலை கொடுப்பதோடு ஆண்மைக்கு முக்கிய மருந்தாகவும் உள்ளது. பேரிச்சம் பழத்தை ஆட்டுப் பாலில் கலந்து இரவு ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வர ஆண்மை கூடும்.

வாழைப்பூ :

வாழைப்பூவை பருப்புகளுடன் சேர்ந்து சமைத்து உண்டு வந்தால் உடல் வலிமையோடு ஆண்மையும் பெருகும்.

சுரக்காய் விதை :

சுரக்காயின் விதையை பொடி செய்து கருப்பட்டி அல்லது சர்க்கரையை சேர்த்து தினமும் 10 கிராம் உண்டு வந்தால் ஆண்மை பெருகும்.

அமுக்கிரா :

அமுக்கிரா கிழங்கு வேருடன் பாதாம் பருப்பு, கசகசா, சாரா பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

Categories

Tech |