Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கும்…பூசணி விதை பானம்…!!

பூசணிக்காய் விதையில் உள்ள மருத்துவ குணங்கள்:

புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்று நோய்களையும் குணமாக்கும் திறன் கொண்டது பூசணி விதை.

பூசணி விதை, பல்வேறு மருத்துவ பயன்கள் கொண்டுள்ளது. பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுகாதார நலன்களை உள்ளடக்கியது.

பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைவாக உள்ளன.

மேலும் மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய தாதுக்கள் நிறைவாக பூசணி விதையில் இருக்கிறது.

பூசணி விதையில் உள்ள மெக்னீசிய சத்துக்கள் உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையை குறைத்து, இதய ஆரோக்கியத்தை காக்கும்.

ஒரு கப் பூசணி விதைகளை சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மெக்னீசியம் கிடைத்துவிடும்.

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதையில் உள்ளது. அது இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

பூசணி விதைகளை காய வைத்து பொடி செய்து, அந்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிப்பது மட்டும்மல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ராலை குணமாக்கும்.

ஒரு கையளவு பூசணி விதைகளை எடுத்து பொடியாக்கி 2 கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டவும். பூசணி விதை பானம் தயார். அதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்யும்.

Categories

Tech |