Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்களின் முகம் பொலிவிற்கு இயற்கை தரும் டிப்ஸ்..!!

ஆண்களுக்கு முகம் அழகாக இருப்பதற்கும், வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கும் இயற்கை தரும் டிப்ஸ்..!

பெண்கள் முகம் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு, ஆண்கள் கொடுப்பதில்லை. ஆண்கள் வெளியில் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள், அப்படி இருக்கும் பொழுது வெளியில் இருக்கும் மாசுக்கள்  முகத்தில் படியும். அது சருமத்தில் அழுக்குகளாக உட்கார்ந்து விடும். முகம் கழுவும் பொழுது,  அழுக்குகள் மட்டும்தான் நீங்கும். நம் சருமத்துளைகளில் இருக்கு அழுக்குகள்  போகாமல் அப்படியே படிந்திருக்கும்.

முகம் முழுவதும் கருமையாக மாறிவிடும். அந்த கருமையைப் போக்குவதற்கும், சருமம் மென்மையாக இருப்பதற்கும் இயற்கை முறை இருக்கிறது. மாசு தூசுக்கள்  சருமத்தில் தங்குவதால் நிறைய பாதிப்புகள் நம் தோலில் ஏற்படும்.

இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படும். அதை எப்படி இயற்கையான முறையில் சரிசெய்து கருமையை நீக்கி முகத்தை அழகாக பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பப்பாளி இலை சாறு  – 1 ஸ்பூன்

வேப்பிலை சாறு            – 1 ஸ்பூன்

கற்றாழை ஜெல்  – 1ஸ்பூன்

பப்பாளி இலையை  மையாக அரைத்து ஒரு இரண்டு ஸ்பூன் அளவிற்கு  சாறு  கொள்ளுங்கள்.  ஒரு  கைப்பிடி அளவு வேப்பிலையை  அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். கற்றாழை ஜெல் எடுத்து கொள்ளவும். இந்த வேப்பிலையில் உள்ள சத்துக்கள்  முகத்தில் முகப்பரு  பாதிப்புகள் இருக்கும் பொழுது, கிருமி தொற்று நீக்கி, முகத்தை நல்ல ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு வேப்பிலை இலைச்சாறு பயன்படுகிறது.

வேப்பிலை சாறு, பப்பாளி சாறு, கற்றாழை ஜெல் இவை மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்கள் முகம் முழுவதும் நன்றாக மசாஜ் போன்று செய்யுங்கள். 30 நிமிடம் முகத்தில் மாஸ்க் போன்று போட்டு கொள்ளுங்கள்.  தொடர்ந்து ஒரு வாரம் இப்படி செய்துவிட்டு வந்தால் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, அதன்பிறகு கரும்புள்ளிகள் நீங்கி, கருப்புத் திட்டுக்கள் எதுவாக இருந்தாலும் சரி உங்கள் முகத்தில் உள்ள எல்லா பாதிப்புகளும் நீங்கி விடும். உங்கள் முகம் பொலிவாக, அழகாக இருக்கும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். சோப்பு பயன்படுத்தாதீர்கள் காலையில் குளிக்கும்போதும் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |