Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம்பளம்…. பிசிசிஐக்கு நன்றி தெரிவித்து டாப்ஸி ட்விட்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இணையான போட்டிக் கட்டணத்தை பிசிசிஐ செலுத்தியதற்கு நடிகை டாப்ஸி பன்னு, அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஇ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது, இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணிக்கு இணையாக மகளிர் அணிக்கும் இணையான ஊதியம் வழங்கப்படும் என்று கூறினார்.

இதுகுறித்து ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், பாகுபாட்டைக் கையாள்வதற்கான முதல் படியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்களுக்கு ஊதிய சமபங்கு கொள்கையை செயல்படுத்தி வருகிறோம். BCCI பெண்கள் கிரிக்கெட் வீரர்கள். கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தின் புதிய சகாப்தத்திற்கு நாம் செல்லும்போது ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றார்.

மேலும் பிசிசிஐ பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அவர்களது ஆண்களுக்கு வழங்கப்படும் போட்டிக் கட்டணமே வழங்கப்படும். டெஸ்ட் (INR 15 லட்சம்), ODI (INR 6 லட்சம்), T20I (INR 3 லட்சம்). சமபங்கு ஊதியம் என்பது நமது மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு எனது அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் ஆதரவிற்கு நான் அபெக்ஸ் கவுன்சிலுக்கு நன்றி கூறுகிறேன். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டார்.

ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் இணையான போட்டி கட்டணத்தை பிசிசிஐ வழங்கும் என தெரிவிக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விவி எஸ் லக்ஷ்மன், கௌதம் கம்பீர் மற்றும் மகளிர் வீராங்கனைகளான ஹர்மன் பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தானா உட்பட பலரும் நன்றி தெரிவித்து வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இணையான போட்டிக் கட்டணத்தை பிசிசிஐ செலுத்தியதற்கு நடிகை டாப்ஸி பன்னு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். “சம வேலைக்கு சம ஊதியத்தை நோக்கிய ஒரு பெரிய படி. முன்னுதாரணமாக செயல்பட்ட பிசிசிஐக்கு நன்றி” என்று டாப்ஸி ட்வீட் செய்துள்ளார். நடிகை அனுஷ்கா சர்மா ஜெய் ஷாவின் ட்வீட்டிற்கு 3 கைதட்டல் எமோஜிகளுடன் பதிலளித்தார்.

Categories

Tech |