நடிகை ரெஜினா கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு படங்களிலும் இவர் முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் ஷாகினி டாகினி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு இந்த படம் குறித்து பேட்டி எடுத்தார்.
அப்போது அவர் ஆபாச ஜோக் ஒன்றை கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்கிறேன் என்று கூறிவிட்டு ஆண்களும் மேகியும் ஒரு மாதிரியானவர்கள் தான். ஏனெனில் இரண்டும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும் என்று கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பல வகையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.