தமிழகத்தில் சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, அத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 30 அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில், நரிக்குறவர், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஆண்களுக்கான திருமண உதவி தொகை 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும். 15 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.