ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை பற்றி உலவும் தவறான நம்பிக்கை மற்றும் உண்மைகள் பற்றி மருத்துவர்கள் விளக்கமாக கூறியுள்ளனர்.
உலகில் உள்ள ஆண்களும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு சிலர் முன்வருகின்றனர். ஆனால் கருத்தடை பற்றி உலகம் தவறான தகவல்களால் பின்வாங்குகின்றனர். இந்நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை பற்றி உறவும் தவறான நம்பிக்கை மற்றும் உண்மைகளை மருத்துவர்கள் விளக்கமாக கூறியுள்ளனர். அதன்படி, “கருத்தடை செய்யும் போது வலி மிகுந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் லேசான வலி அல்லது வலி ஏற்படாது. மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அலுவலக வேலைகள், ஒரு வாரத்தில் உடலுறவு மற்றும் உடற்பயிற்சி செய்யலாம்.
அதன் பிறகு பதினைந்து நாட்களில் முற்றிலும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். இதனை அடுத்து உடலுறவில் ஈடுபாடு குறையும் என்பதும் விரைப்பு குறையும் என்பதும் முற்றிலும் தவறானது. இது விந்தணுக்களை மட்டுமே தடுக்கும். மற்றபடி இயல்பான செயல்பாடு அப்படியே இருக்கும்” என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எனவே மற்றவர்கள் கூறும் தவறான தகவல்களை ஆண்கள் நம்ப வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.